நோக்கம்
அறிவுலகின் ஆசானாய் தமிழர்களின் ஒப்பாரும் மிக்காரும் இல்லாத தனிப்பெரும் தத்துவ மேதை பகுத்தறிவுப்பகலவன் தந்தை பெரியார் பற்றி இதோ எமது படைப்புக்களை இங்கே பதிவு செய்கிறேன். தங்களின் மேலான கருத்துக்களை இங்கே எமது பார்வைக்கு வைக்க உம்மை அழைக்கிறோம்

தமிழனின் முகவரி
மானுட தந்தை பெரியார்
மனித நேயத்தின் மறு பெயர்
மதம் பேசுவோர் மத்தியிலே மனிதம் பேசியவர்

Friday, May 29, 2009

கலைப் போராளி சீமான்

கலைப் போராளி சீமான் அவர்களே,
வணக்கம்அண்ணா எல்லா இளைஞர்களைப்
போலவும் நானும் உங்கள் பொறி பறக்கும் பேச்சை க்கேட்டு ஆவேசம் அடைந்தவர்களில் நானும் ஒருவன்,அடிக்கடி உங்களை ஒரு தனியார் தொலைக்காட்சி களில் பார்த்து
பேச்சை கேட்டு உங்கள் மீது பைத்தியம் ஆகிப்போனேன்.தமிழ் இளைஞர்களை
பெரியார் வழியில் இட்டு செல்ல ஒரு நல்ல வழிகாட்டியாய் இருப்பீர்கள் என நம்புகிறேன். இப்போதும்..நீங்கள் உங்கள் தொழில் தொடர்பாக எமது சிற்றூரில் வந்து தங்கிய போது உம்மை அழைத்து சிறப்பு கூட்டம் நடத்தினோம்.மிக மிக மகிழ்ச்சி அடைந்து பூரித்து போனேன்.இந்த முறை தாங்கள் கேட்டுகொண்ட படி அ இ அ தி மு க அணிக்கே வாக்களித்தேன்( என் வீட்டில் எதிர்ப்பை மீறி ஏனெனில் எமக்கு உதய சூரியன் தவிர வேறெதுவும் தெரியாது உங்களை போலவே நானும் எம் ஜி ஆர் படம் பார்த்தாலே
குற்றமென உணர்ந்து வளர்ந்தவன்)
அண்ணா அது என்ன காங்கிரசுக்கு வாக்களிக்காதீர் என ஒரு புது முழக்கம்?
தி மு க என்ன செய்தது ?
அதன் தலைவர்கள் என்ன செய்தார்கள் என் உறவுகள் செத்தொழிந்த போது?
போராட வேண்டாம் ஒரு ஈன கூக்குரல் கூட கேட்க வில்லையேநீங்கள் திருச்சி கூட்டத்திற்கு வருகை தந்தீர்கள், எதிர் பார்த்ததை விட அதிக உணர்வோடு பேசினீர்கள்..என்னால் எச்சில் கூட விழுங்கமுடியாமல் உங்களை உற்று கவனித்தேன்.காங்கிரசை கழட்டு கழட்டு என கழட்டினீர்கள், மானங்கெட்ட காங்கிரசு க்காரனுக்கு உறைக்காது . விட்டு விடுவோம்..
நம்ம செய்திக்கு வருவோம்?
திருச்சி உரையில் ஒன்று குறிப்பிட்டீர்கள்..கலைஞரை சாடமாட்டேன் என்று.
அவருடைய தமிழ் எனக்கு வாழ்வளித்தது.உண்மை தான் அண்ணா. அன்றும் இன்றும் நம்பினோம்.கலைஞரின் கரங்கள் எப்போதும் காங்கிரசை பற்றிக்கொண்டிருக்காது .அது ஒரு நாள் காங்கிரசை விட்டு விலகும். அப்போது உங்களோடு முதலில் கரம் கோர்ப்பவன் நான்தான் என்று.ஈழ ப்படுகொலையில் அவர் இன்றைய நிலை என்ன? உமக்கு தெரியாதா?ஒரு வேளை தெரியாமல் செய்துவிட்டார் என நம்புகிறீர்களா?ஏன் அவ்வளவு பாசமா கலைஞர் மீது அண்ணா?உமது கலைக்குழுவில் யாருமே சாடவில்லையே? கலைஞரை யாருமே கண்டிக்கவில்லையேகலை உலக பாசமா?

ஈழ ப்படுகொலை யில் துரோகம் செய்தது திமுக இல்லையா?இல்லையெனில் காங்கிரசின் துரோகத்துக்கு துணை போக வில்லையா?துரோகத்தை விட அதற்கு துணை போவது மாபெரும் குற்றம் இல்லையா?வரலாறு மன்னிக்குமா? கலைஞரை?

குறிப்பு: இந்த இடுகை தேர்தலுக்கு முன்னர் எழுதி இப்போது மீண்டும் வெளியிடப்படுகிறது.

தேர்தல் வெற்றி பெற்ற பணத்திற்கு எனது வாழ்த்துகள்

காங்கிரசின் வெற்றிக்கு ஒருவேளை உமது பாரபட்சமான தேர்தல்பரப்புரை தான் காரணமாக இருக்குமோ?

5 comments:

.கவி. said...

அன்புள்ள தோழரே

ஏனெனில் , நம்மைப் போல் பலரை பகுத்தறிவுடன் உலவ வாய்ப்பளித்தது திமுக.

வெயிலின் அருமை நிழலில் தான் தெரியும்.

நீங்கள் வெயிலைக் காணாமல் நிழலில் இருந்து மட்டும் பேசுவது போல் தோண்றுகிறதே தோழரே...

நட்புடன்
.கவி.

ராஜ நடராஜன் said...

முழுப் பிரச்சாரத்கான காலமின்றும் நினைத்த காங்கிரஸ் வேட்பாளர்கள் தோல்வியை சந்தித்திருப்பதும் சீமான்,பாரதிராஜா,சுந்தரராஜன் போன்றோர் உழைப்பால் என்பதையும் மறுத்து விட முடியாது.

வனம் said...

வணக்கம்

\\ஏனெனில் , நம்மைப் போல் பலரை பகுத்தறிவுடன் உலவ வாய்ப்பளித்தது திமுக.\\

எனக்கு இதில் உடன்பாடு இல்லை,
என் குடும்பமும் தி.மு.கா சார்ந்த குடும்பம்தான் ஆனால் என் வீட்டில் பகுத்தறிவு சார்ந்த எந்த கோட்பாடும் இல்லை

நான் இணையத்தில் தேடத்துடங்குவதர்கு முன்வரை பெரியார் சிந்தனைகள் பற்றி எந்த அறிமுகமும் இருந்ததில்லை- அவர் ஒரு கடவுள் மறுப்பாளி எனும் வார்த்தையை தவிற.

இப்போதும் அந்த கட்சியின், கட்சி சார்ந்தோரின் செயல்பாடுகள் எதிலும் பெரியாரை பற்றி எந்த ஒரு முன்னெடுப்பும் இல்லை, அவர்களின் தொ.கா குழுமங்களில் எந்த பகுத்தறிவு சார்ந்த நிகழ்ச்சிகளும் இல்லை

ஆமா என்ன எனக்கு போட்டியா இருக்க்கீங்க - உங்கள் புகைப்படம் பார்த்தேன்

பகுத்தறிவு முழக்கம் said...

நாம எப்போதுமே கொஞ்சம் வித்தியாசம் தான்..

பகுத்தறிவு முழக்கம் said...

நாம எப்போதுமே கொஞ்சம் வித்தியாசம் தான்..