நோக்கம்
அறிவுலகின் ஆசானாய் தமிழர்களின் ஒப்பாரும் மிக்காரும் இல்லாத தனிப்பெரும் தத்துவ மேதை பகுத்தறிவுப்பகலவன் தந்தை பெரியார் பற்றி இதோ எமது படைப்புக்களை இங்கே பதிவு செய்கிறேன். தங்களின் மேலான கருத்துக்களை இங்கே எமது பார்வைக்கு வைக்க உம்மை அழைக்கிறோம்

தமிழனின் முகவரி
மானுட தந்தை பெரியார்
மனித நேயத்தின் மறு பெயர்
மதம் பேசுவோர் மத்தியிலே மனிதம் பேசியவர்

Friday, June 5, 2009

மக்களை அழிக்கும் கிருமிகள்

அல்லோ அலோ யார் பேசுறிங்க?
சன் டி வி லருந்து வர்ஷினி பேசுறன்
ரமேஷா? ஓ கே ரமேஷ் எங்கருந்து பேசுறிங்க ரமேஷ்
என்ன பண்ணிட்ட்ருக்கிங்க ரமேஷ் ஓ
ஆர் யு ஸ்டடியிங்? ஒஒ ஓகே ரமேஷ்
ஒரு கடி ஜோக் சொல்லுங்க ரமேஷ்..

அய்யோ மேடம் எனக்கு ஒண்ணுமே பேச முடில மேடம்
நரிய டயம் ட்ரை பண்ணேன் மேடம்
லைனே கெடக்கலே..
அய்யோ நீங்களே கூப்டு இருக்கிங்க எனக்கு
ஒண்ணுமே பேச வரல மேடம்


ஹாய் வியூவர்ஸ்

அக்சுவல்லி நான் என்ன சொல்ல ட்ரை பன்றேன் நா

உங்க பர்ஃபாமன்ஸ் சூப்பர்ப்;இன்னும் கொஞ்சம் ட்ரை பண்ணலாமே
இட்ஸ் வெரி எஞ்சாய் ஃபுல்

உங்க பாடி லங்குவேஜ் நல்லாவே இருக்கு இட்ஸ் ரியல்லி சூபெர்ப்
ஓ கே உங்களுக்கும் திவ்யா வுக்கும் கெமிச்ட்ரி ரொம்ப நல்லா ஒர்க் அவுட் ஆகுது
அப்பிடியே கண்டினியூ பண்ணுங்க


டேய் உங்களை என்னடா பண்ணூரது
என்னங்கடா தமிழ் இது;
ஏண்டா இப்பிடி ஆயிட்டிங்க நீங்க?

இந்த அரை வேக்காடுகளுக்கு இந்த ஊடகங்களில் வேலை கொடுத்து விட்டு
நம்ம பண்பாட்டை கெடுக்கிற தொல்லை காட்சி அலைவரிசைகளை புறக்கணிப்போம்

பண்பலை யில் சொல்லவே வேண்டாம்; அளவுக்கு மீறி தமிழ் கொலை
தமிழை அழிக்க ஒரு போட்டியே நடக்கிறது;

தமிழர்களே நமக்கென்று ஒரு தனி அடையாளம் உள்ளது
அதை இழக்காதீர்கள்

தமிழர் களை காட்டி கொடுக்கும் கூட்டி கொடுக்கும் சன், விஜய் தொலை காட்சி களை விரட்டுவோம்.

மக்கள் தொலைக்காட்சியை பரப்புவோம்

1 comment:

Mugundan | முகுந்தன் said...

அசிங்கம், கேவலமான செயல்,

நாலு ஆங்கில வார்த்தையை இணைத்தால்
தான் "அறிவாலி" என நினைக்கும்
மூடர்கள்.

தமிழர்களே, மொழி மட்டுமே ஒரு இனத்தின்
அடையாளம்.

குழந்தைகளுக்கு மொழி ஒரு தகவல் பறிமாற்ற கருவி
மட்டுமே என நாம் உரக்க சொல்லிக் கொடுத்தால்
வரும் தலைமுறை மாறலாம்.