நோக்கம்
அறிவுலகின் ஆசானாய் தமிழர்களின் ஒப்பாரும் மிக்காரும் இல்லாத தனிப்பெரும் தத்துவ மேதை பகுத்தறிவுப்பகலவன் தந்தை பெரியார் பற்றி இதோ எமது படைப்புக்களை இங்கே பதிவு செய்கிறேன். தங்களின் மேலான கருத்துக்களை இங்கே எமது பார்வைக்கு வைக்க உம்மை அழைக்கிறோம்

தமிழனின் முகவரி
மானுட தந்தை பெரியார்
மனித நேயத்தின் மறு பெயர்
மதம் பேசுவோர் மத்தியிலே மனிதம் பேசியவர்

Saturday, June 20, 2009

பெரியாரைப் பிழையாமை

பெரியாரு சாமி இல்லன்னு சொல்லல.ஜாதி சண்டை , மத சண்டை கோபத்துல அப்பிடி சொல்லிட்டாருங்க.மத்தபடி சாமிய தப்பா சொல்லல.

பெரியார் வீட்டுக்குள்ள யாருக்கும் தெரியாம சாமி கும்புட்டாராம் பெரியார்

தலித்துகளுக்கு ஒண்ணுமே செய்யல.

சாமி கும்புடாத பெரியாருக்கு குன்றக்குடி அடிகளாரோட என்னய்யா ப்ரெண்ட்சிப்பு

பெரியாரே விபூதி குங்குமம் பொட்டு எல்லாமே ஏன் வச்சாரு.?
ஜாதி இல்ல இல்லன்னு சொல்லிட்டு ஏன் ஜாதி வாரியாக இட ஒதுக்கீடு கேட்டாரு ? இவரு தான ஜாதி எதிர்ப்பாளரா?

அவரு ஒரு வறட்டு நாத்திகவாதி; நாத்திகம் எல்லாம் இப்போதைக்கு நாட்டுக்கு உதவாது.

இதெல்லாம் நம்ம நன்றியுள்ள் சனங்க அய்யா மேல வழக்கமா சொல்றது தான் ஆனாலும் இப்பிடியே விட முடியாது ;
பெரியாரு சாமி இல்லன்னு சொல்லல.ஜாதி சண்டை , மத சண்டை கோபத்துல அப்பிடி சொல்லிட்டாருங்க.மத்தபடி சாமிய தப்பா சொல்லல
மொதல்ல சாமி இருந்தாதானெ கோபிக்கறத்துக்கு.சில மூளை இல்லாத முண்டங்கள் தான் அப்பிடி சொல்லிகிட்டு திரியுதுங்க கடவுள் இல்லை; கடவுள் இல்லை;கடவுள் இல்லவே இல்லை; கடவுளை கற்பித்தவன் முட்டாள்;வனங்குகிறவன் காட்டுமிராண்டி; நல்லா தெளிவா அழகா பொட்டுல அடிச்சமாறி பெரியாரு அய்யா சொல்லி இருக்காருங்களே. எல்லத்த விட ஏன் கடவுள் இல்லன்னு சொல்றேன்னா. கடவுள் நம்பிக்கை ஒழிஞ்சால் எல்லா ஜாதி மதமும் ஒழிஞ்சி போய்டும் என்றும் சொல்லி இருக்காரு. இதுக்கு மேல இத பத்தி ஒண்ணும் சொல்லுறதுக்கு இல்லங்க.


பெரியார் வீட்டுக்குள்ள யாருக்கும் தெரியாம சாமி கும்புட்டாராம்
இத எவன் பாத்தான்னு தான் தெரியல. ஒருத்தனும் இன்னும் நிரூபிக்கல ; இந்த பாப்பார பசங்க தான் மூலைக்கு மூலை இத சொல்லிகிட்டு அலையுறானுவ. அவரோட அப்பா வெங்கட சாமி வீட்டுல கடைசி வரை சாமி கும்புட்டுகிட்டு தான் இருந்தாரு; யாரும் மறுக்கல அது அவங்களோட விருப்பம்.. அவரு பொது வாழ்க்கைக்கு வந்தப்புறம் இயக்கத்தை அமைத்ததற்கப்புறமா ஊட்டுக்குள்ளாற சாமி கும்புட்டாரா? இதுக்கு யாராவது சவால் விட தயாரா?

பெரியார் தலித்துகளுக்கு ஒண்ணுமே செய்யல
ஆதி திராவிடர்கள் தான் (அதாவது கருப்பா இருக்கறவங்க தான்) இந்த மண்ணின் பூர்வ குடிகள் என்று முதலில் அறிவித்தவர்தான் பெரியார். கொஞ்சம் சிவப்பாகவோ மா நிறம் கொண்டவர்கள் கூட பிற்காலத்துல பாப்பான் கூட கலப்பு வந்ததற்கு பிறகு தான் நிறம் மாறியது என்றார். நெற்றியிலும் ,சத்திரியன் வைசியன் சூத்திரன் அங்கங்க பொறந்தாங்க ந்னு சொன்னப்ப இதுல எதுல்யும் பொறக்காம , பொறக்கவேண்டிய இடத்துல பொறந்தவன் பஞ்சமன் தானு அய்யா கொடுத்த விளக்கம் யாராலும் மறக்க முடியாது அம்பேத்கரை பெருமைபடுத்தி மகிழ்ந்தவர்களில் பெரியாரை போல் யார்? இட ஒதுக்கீட்டில் நன்றாக சுகம் அனுபவித்துவிட்டு கொழுத்து திரியும் பார்ப்பன அடிவருடிகள் தான் இப்படி பேசமுடியும். நம்மை போன்ற நன்றியுள்ள நாய்களால் பேசமுடியாது.

சாமி கும்புடாத பெரியாருக்கு குன்றக்குடி அடிகளாரோட என்னய்யா ப்ரெண்ட்சிப்பு?

பெரியாரே விபூதி குங்குமம் பொட்டு எல்லாமே ஏன் வச்சாரு.?
சகிப்பு தன்மைக்கு இதைவிட எடுத்துக்காட்டு வேற எதையும் சொல்லமுடியாது< அடுத்தவங்க உணர்வை மதிப்பவர் பெரியார் என்பதை இதிலிருந்தே அறியலாம்.ஆன்மீக வாதியாக இருப்பினும் அவருடைய தமிழ் பற்றும் தொண்டும் யாராலும் மதிக்கப்படவேண்டியவை. அவர் ஒரு ஆன்மீக பகுத்தறிவுவாதி அதை உணர்ந்தவர் பெரியார். ராஜாஜி ஒரு தடவை பெரியாரை சந்தித்த போது பெரியார் அவர்களை வாழ்த்தி விபூதி பூசுனதா சொல்லுறங்க; ஒரு மரியாதைக்காக ஏற்றிருக்கலாம்.

ஜாதி இல்ல இல்லன்னு சொல்லிட்டு ஏன் ஜாதி வாரியாக இட ஒதுக்கீடு கேட்டாரு ? இவரு தான ஜாதி எதிர்ப்பாளரா?
எந்த உழைக்கும் மக்கள் எதன் அடிப்படையில் சுரண்டப்படுகிறார்களோ, எதன் அடிப்படையில் உரிமைகள் மறுக்கப்படுகிறதோ அதன் அடிப்படையில் அதன் தீவிரத்திலேயே அதை மீட்டெடுப்பதே நூறு விழுக்காடு வெற்றியை தரும் என்று சொல்லி அதை செய்து காட்டியவர் பெரியாரே ஆவார். என்றைக்கு வருணாசிரம தர்மம் ஒழிந்து சமதர்மம் உருவாகுமோ அன்றைக்கு தானாகவே இடஒதுக்கீடு கொள்கை தேவை அற்றதாகிவிடும் என்பது என் கருத்து.

அவரு ஒரு வறட்டு நாத்திகவாதி; நாத்திகம் எல்லாம் இப்போதைக்கு நாட்டுக்கு உதவாது
எந்த இடத்தில் நாத்திகம் பரவுகிறதோ அங்க மக்கள் புரட்சி வெடிக்கும். சம தர்ம சமுதாயம் நிலவும். உலகில் பல்வேறு புரட்சி இயக்கங்கள் தோல்வி யுற்றதற்கு அடிப்படை காரணம் அங்கே நாத்திக சிந்தனை இல்லாதது தான். இப்போதைக்கு உலகத்திற்கு தேவை நாத்திகம் மாத்திரமே; நாத்திகம் வளர்ந்தால் நல்ல சிந்தனை பெருகும்;சாதிமத மோதல்கள் ஒழியும்

பெரியாரை மறுவாசிப்பு செய்ய எண்ணும் தோழர்களுக்கு:
இது தன்னை ப்ப்ற்றி அவரே சொன்னது தான். ஆனாலும் இன்னும் அந்த அளவுக்கு சிந்திக்க யாரும் தகுதி அடைய வில்லை . அதனால் அந்த் எண்ணத்தை இப்போதைக்கு குழி தோண்டி பொதச்சிடுங்க.

படிச்சதுக்கு ரொம்ப நன்றிங்க
எதாச்சும் தவறான தகவல் இருந்தாலும்
அதிகப்பிரசங்கியாக இருந்தாலும் பொறுத்துகுங்க .

No comments: