நோக்கம்
அறிவுலகின் ஆசானாய் தமிழர்களின் ஒப்பாரும் மிக்காரும் இல்லாத தனிப்பெரும் தத்துவ மேதை பகுத்தறிவுப்பகலவன் தந்தை பெரியார் பற்றி இதோ எமது படைப்புக்களை இங்கே பதிவு செய்கிறேன். தங்களின் மேலான கருத்துக்களை இங்கே எமது பார்வைக்கு வைக்க உம்மை அழைக்கிறோம்

தமிழனின் முகவரி
மானுட தந்தை பெரியார்
மனித நேயத்தின் மறு பெயர்
மதம் பேசுவோர் மத்தியிலே மனிதம் பேசியவர்

Saturday, May 2, 2009

கலைஞரை யாராச்சும் காப்பாத்துங்களேன்

கலைஞரை யாராச்சும் காப்பாத்துங்களேன்கலைஞரை யாராச்சும் காப்பாத்துங்களேன்

அய்யகோ தமிழர்களே ,
உங்களுக்கெல்லாம் ஈவு இரக்கமே கிடையாதா,
தயவு செய்து நம் தமிழின தலைவர் !? கலைஞர் கருணாநிதியை யாராச்சும் காப்பற்றுங்களேன்.
அவரு தாங்க தி மு க தலைவரு
திருவாரூர் (திருட்டு ரயில்) முத்துவேலர் மகன் கருணாநிதி!
கருணையே வடிவான கலைஞர்.
தமிழினத்துக்கு எத்துணை தியாகம் புரிந்தவரை தனியே விடலாமா?
எந்த தோல்வி வந்திடினும் துவளாத தலைவனல்லவா?
கருமாதி வீட்டிலும் கவிதை பாடுவார்.
தேவை ஏற்படின் அந்தர் பல்டி அடித்திடுவார்

இதோ சில எடுத்துக்காட்டுகள்

ஈழ தமிழர்களுக்காய் அவரின் தொண்டுகள் & போராட்டங்கள்

1. தமிழ்செல்வன் சாவுக்கு இரஙகற் பா இயற்றினார் . நன்றி
2. பாராளுமன்ற உறுப்பினர் பதவி துறப்போம் என்றார்.
பதவி விலகல் கடிதம் பெற்றார் பாராட்டுக்கள்
3. மாங்கொல்லையில் எழுச்சிஉரை ஆற்றினார் - வீரம்
4. மாபெரும் மனித சங்கிலி நடத்தினார். ஈரம்
5. நடுவண் அரசுக்கு தந்தி அடித்தார்.( வசதி இல்லை போலும்)-விவேகம்
6. மக்களுக்காக உயிர் விடுவேன் என்றார்-பாசம்
7. ஈழ தமிழர் நல உரிமை கழகம் தொடங்கினார் – இன உணர்வு, எவ்வளவு பாசம், பரிவு?
8. பிரபாகரன் என் நண்பன் என்றார்- என்னே துணிவு?
9. பிரபாகரன் தீவிரவாதி என்றார் – நேர்மை யின் வெளிப்பாடு
10. பிரபாகரனை கைது செய்தால் கவுரவமாக நடத்த வேண்டும் என்றார்- மாட்சிமை தங்கிய பண்பு
11. நடுவண் அரசை கண்டித்து முழு அடைப்பு நடத்தினார்-அறிவுடைமை யாராலும் முடியுமா?(தன் அரசை எதிர்த்து தானே போராடுவது)
12. உண்ணா விரதம் இருந்து உயிர் துறக்க துணிந்தார் – போரை நிறுத்தினார். இராஜ தந்திரம்

13.வழக்குரைஞர்களின் போராட்டத்தை நாசூக்காக தடம் மாற்றினார்

13. சீமான், கொளத்தூர் மணி ,மணியரசன் போன்றோரை கைது செய்து சிறையில் அடைத்தார்

இப்படி பலப் பல சொல்லலாம். சொல்லிக் கொண்டே போகலாம்

“ தமிழர்களே தமிழர்களே என்னை கடலிலே தூக்கி போட்டாலும் கட்டு மரமாக மிதப்பேன், என் மீது ஏறி நீங்கள் சவாரி செய்யலாம்”

இப்படி கூறும் நம் முன்னாள் தமிழின தலைவர் அவர்களை யார் காப்பாற்றுவது ?

தனியே களத்தில் நிற்கிறார்.அவர் சொல்ல வேண்டிய அனைத்தையும் சொல்லி புதிய தமிழ் அன்னை புரட்சி தலைவி ஜெய லலிதா பேர் வாங்குகிறார். மக்கள் அவர் பக்கம் சாய ஆரம்பித்துவிட்டனர்.

என்ன செய்வார் கலைஞர்? அருகில் யாருமற்று குடும்பத்தோடு காங்கிரஸ் கம்பெனியுடன் தன்னந்தனியே நிற்பது நியாயமா?

தயவு செய்து தமிழர்களே ஒரே ஒரு தொகுதி கூட கலைஞருக்கு தராமல் தொடர்ந்து அவருக்கு மக்கள் பணி ஆற்ற மீண்டும் ஒரு வாய்ப்பு கொடுத்து
அ தி மு க கூட்டணிக்கு வாக்களித்து வெற்றி பெறச்செய்யுங்கள்

வெற்றி பெறவேண்டிய உங்கள் சின்னங்கள்:
இரட்டை இலை, மாம் பழம் , பம்பரம் , அரிவாள் சுத்தி

தவிர்க்க வேண்டியவை
உதய சூரியன், கை, நட்சத்திரம்

No comments: